இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாமன்னன். இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

இதன் காரணமாகவே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இதுவரை தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்த ரசிகர்களை கவர்ந்த வடிவேலு தற்போது மாமன்னன் திரைப்படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஜூன் 29ஆம் தேதி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

திரைப்படம் வெளியாகி ஐந்தே நாட்களில் 40 கோடி வரை வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் தனது கடைசி படமான மாமன்னன் திரைப்படம் மூலம் நல்ல ஹிட்டை பார்த்து விட்டார். அந்த மகிழ்ச்சியில் இயக்குனர் மாறி செல்வராஜுக்கு அண்மையில் காரை பரிசாக வழங்கினார். தற்போது உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் திரைப்படத்திற்காக 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

