திடீர் திருப்பம்…. கட்சியில் இணைந்ததும் முக்கிய பதவி…. செம குஷியில் தாடி பாலாஜி….!

By Nanthini on தை 26, 2026

Spread the love

தமிழக அரசியலில் நடிகர்களின் வரவு அதிகரித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் தனக்கு உரிய அங்கீகாரம் மற்றும் பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியில் இருந்த நடிகர் தாடி பாலாஜி, அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து, அவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையிலான லட்சிய ஜனநாயக கட்சியில் (LJK) முறைப்படி இணைந்தார். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தவெகவில் இணைந்த பாலாஜிக்கு அங்கு எந்தப் பொறுப்பும் ஒதுக்கப்படாததே அவர் வெளியேறியதற்கான முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

பாலாஜியின் வருகையைத் தொடர்ந்து, அவருக்குக் கட்சியில் மிகப்பெரிய அங்கீகாரத்தை லட்சிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கியுள்ளார். அக்கட்சியின் “பரப்புரை பொதுச்செயலாளர்” என்ற உயரிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜுனா வகிக்கும் பதவிக்கு இணையான ஒரு முக்கியப் பொறுப்பாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வரும் தேர்தல்களில் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராகவும், தேர்தல் வியூகங்களை முன்னெடுக்கும் முக்கிய முகமாகவும் தாடி பாலாஜி உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.