கள்ளக்காதலியாக நடிப்பது ஏன்..? திரிஷாவை விமர்சித்த நபர்… தக்க பதிலடி கொடுத்த பிரபல நடிகர்..!!

By Soundarya on ஆனி 8, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷா பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து வைத்துள்ளார். சமீபத்தில் குட் பேட் அக்லி, விடா முயற்சி படங்களில் நடித்தார். தற்போது தக் லைப் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் ரிலீஸ் ஆகி விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் திரிஷாவின் கதாபாத்திரத்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். இப்படி  த்ரிஷாவை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்த நிலையில் அவருக்கு ஆதரவாக நடிகர் எஸ்வி சேகர் குரல் கொடுத்திருக்கிறார்.

அதாவது திரிஷாவிற்கு சில கேள்விகள் என்ற தலைப்பில் பதிவிட்டு ஒருவர், “கணவரை விட்டு வேறு ஒருவரை காதலிப்பது, கணவரோடு கோபித்துக் கொண்டு செல்வது, கள்ளக்காதலியாக நடிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். இது போன்ற கதாபாத்திரங்கள் உங்களை தேடி வருகிறதா? அல்லது நீங்கள் தான் அதை தேர்ந்தெடுக்கிறீர்களா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த பதிவை டேக்  செய்த நடிகர் எஸ்வி சேகர், த்ரிஷா எப்படி நடிக்க வேண்டும்? யாரோடு நடிக்க வேண்டும்? என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. பிடித்திருந்தால் பாருங்கள். இல்லாவிட்டால் பார்க்காதீர்கள் என்று கூறியுள்ளார்.