தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை ஜோதிகா. இவர் சினிமாவின் உச்சத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர்களிருவரும் தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டுள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு திரையுலகை விட்டு விலகி இருந்தார் நடிகை ஜோதிகா . தொடர்ந்துபல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்தார் நடிகர் சூர்யா. இவர்களுக்கு தற்பொழுது தியா, தேவ் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதைத்தொடர்ந்து நடிகை ஜோதிகா ’36 வயதினிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு மாஸ் ரீ என்ட்ரி கொடுத்தார்.
தற்பொழுது அவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் இறுதியாக சமீபத்தில் மலையாள நடிகர் மம்முட்டி லாலுடன் இணைந்து ‘காதல் தி கோர்’ திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது .
தற்பொழுது நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் மும்பையில் புதிய வீடு வாங்கி அங்கேயே செட்டில் ஆகிவிட்டனர். குழந்தைகளின் படிப்பில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய நடிகை ஜோதிகா தற்பொழுது தனது குழந்தைகளான தியா மற்றும் தேவ் இருவரும் பள்ளி விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடி பதக்கங்கள் மற்றும் கோப்பையை வென்ற வீடியோவை மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களும் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram