தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் மகன் தான் சூர்யா சேதுபதி. இவர் தற்போது பீனிக்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படம் ஜூலை நான்காம் தேதி(நாளை ) ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியுள்ளார். படத்தின் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் சூர்யா சேதுபதி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தான் விஜய் மற்றும் சிம்பு ஆகியோரின் ரசிகர் என்று கூறியிருக்கிறார். மேலும் விஜயின் மெர்சல் படத்தை 30 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன் . மாஸ்டர் படத்தின் இன்ட்ரோ காட்சி எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று கூட எனக்கு தெரியாது” என்று கூறியிருக்கிறார்.
