CINEMA
என்னுடைய ரசிகர்களும் எனக்கு ஒரு குடும்பம் தான்.. ரசிகரின் வீட்டுக்கு நேரில் சென்ற சூர்யா.. வைரலாகும் புகைப்படங்கள்..
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரின் மிரட்டலான நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் தற்பொழுது உருவாகி வருகிறது. இந்த படத்தின் வெற்றியை பொறுத்து இரண்டாவது பாகமும் உருவாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தை முடித்தபிறகு சுதா கொங்கரா உடன் ஒரு படம் மற்றும் வெற்றிமாறன் உடன் வாடிவாசல் படம் ஆகியவற்றில் சூர்யா நடிக்க இருக்கிறார். இந்நிலையில் நடிகர் சூர்யா ரசிகர் மன்றம் பல இடங்களில் உள்ளது நம் அனைவருக்கும் தெரியும்.
அப்படி ஒரு ரசிகர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் சமீபத்தில் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்த நிலையில் அவருடைய வீட்டிற்கு சூர்யா சென்று அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் கூறிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சூர்யா ரசிகர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகளில் ஒருவரான அரவிந்த் என்பவர் சமீபத்தில் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார். இதுகுறித்த தகவல் தெரிந்ததும் சூர்யா உடனடியாக சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள அரவிந்தன் வீட்டிற்கு சென்று அவருடைய பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதுமட்டுமின்றி அரவிந்த் பெற்றோரிடம் பேசிய சூர்யா எந்த உதவி வேண்டுமானாலும் தன்னிடம் கேட்கலாம் என்று கூறியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.