கைவிட்ட கங்குவா.. அடுத்து மலையாள இயக்குனரோடு கைகோர்க்கும் சூர்யா… வாடிவாசல் இல்லாமலே 3 ஹேட்ரிக் உறுதியா..?

By Soundarya on கார்த்திகை 28, 2024

Spread the love

சூர்யா பழம்பெறும் மூத்த நடிகர் சிவகுமார் அவர்களின் மூத்த மகன் ஆவார். இவரின் இயற்பெயர் சரவணன் சிவகுமார் என்பதாகும். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் முன்னணி நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் சூர்யா. தனது 22 ஆவது வயதில் 1977 ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சூர்யா. 2001 ஆம் ஆண்டு நந்தா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி திருப்புமுனையை பெற்றார்.

   

தொடர்ந்து காக்க காக்க, பிதாமகன், பேரழகன், கஜினி, வாரணம் ஆயிரம், அயன் போன்ற கமர்சியல் படங்களில் நடித்து பிரபலமானார் சூர்யா. வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து ஏழாம் அறிவு, ஜெய் பீம், சூரரை போற்று போன்ற திரைப்படங்களில் நடித்து சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார் சூர்யா. சூர்யாவின் திரைப்படங்கள் என்றாலே அவரது ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான தோற்றத்துடன் தோன்றுவார். அது படம் வெளிவரும் வரையிலும் சஸ்பென்ஸ் ஆகவே வைத்திருப்பார்.

   

Surya: `சூப்பர் ஸ்டார்' என அழைத்த தொகுப்பாளர்; சூர்யா அளித்த பதில்; கொண்டாடும் ரசிகர்கள்! | Suriya wins hearts as 'Kanguva' actor refuses to be addressed as Superstar - Vikatan

 

தனது கெட்டப் மற்றும் எதார்த்தமான நடிப்பினாலும் ரசிகர்களை பெற்றவர் சூர்யா. இந்த நிலையில் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் சூர்யா நடித்திருக்கிறார். அடுத்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா45 படத்தில் நடிக்க போகிறார். சூர்யா-  த்ரிஷா ஜோடி இதில் நடிக்க உள்ளது. இந்த படத்தின் பூஜையும் நேற்று முடிந்தது. இந்த படம் சூப்பர் ஹிட் ஆக இருக்கும் என்று நினைக்கிறார்கள். இதனை எடுத்து சூர்யா 46வது படத்தை பிரபல மலையாள படஇயக்குனர்  அமல் நீரத்  இயக்கப் போவதாக கூறப்படுகிறது.

suriya-director

மலையாளத்தில் ஒளிப்பதிவாளராகவும் இயக்குனராகவும் இருக்கிறார்.  பேச்சுலர் பார்ட்டி, ஐந்து சுந்தரிகள், பீஷ்மபர்வம் உள்ள படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக போகைன்வியா என்ற படத்தையும் இயக்கி உள்ளார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது. இதனால் அடுத்த படம் வித்தியாசமான கதையை சூர்யாவை வைத்து பண்ண பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயம் உறுதி என்றால் நிச்சயம் சூர்யா வாடிவாசல் இல்லாமல் மூன்று ஹேட்ரிக் உறுதி என்று சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள். கங்குவாவிற்கு பிறகு வித்தியாசமான கதைகளை சூர்யா தேர்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.