பாகுபலி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மறுத்து இருக்கின்றார்.
தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபல இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்தவர் ராஜமவுலி. தன்னுடைய பேன் இந்தியா படங்களின் மூலமாக சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு சென்றவர். தமிழில் நான் ஈ என்ற திரைப்படத்தை இயக்கி மிகப் பிரபலமான இவர் அதை தொடர்ந்து பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களை இயக்கியதன் மூலமாக மிக கவனம் பெற்றார்.

#image_title
ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படம் பல ஆஸ்கார் விருதுகளை தட்டிச் சென்றது. இவர் இயக்கத்தில் மிக அதிகமாக பேசப்பட்ட திரைப்படம் பாகுபலி இரண்டு பாகங்களாக வெளியான இந்த திரைப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படம் உலக அளவில் பேசு பொருளாக மாறியது.
கோடிக்கணக்கில் வசூல் சாதனை செய்தது. அப்படி ஒரு மாபெரும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதனை வேண்டாம் என்று மறுத்திருக்கின்றார் பிரபல தமிழ் சினிமா நடிகர். அவர் யார் என்றால் நடிகர் சூர்யா தான் தமிழ் சினிமாவில் மிகப் பிரபல நடிகர்களில் ஒருவராக வளம் வரும் இவருக்கு பாகுபலி திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனை சூர்யா தெரிவித்த போது ராஜமவுலி, பாகுபலி படத்தில் நடித்து தன்னை அணுகியதாகவும் ஆனால் நான்தான் அந்த படத்தை மறுத்து விட்டதாக தெரிவித்திருந்தார். மேலும் அந்த வாய்ப்பை மறுத்ததற்காக வருத்தம் தெரிவித்த சூர்யா, ராஜமவுலி உடன் மேலும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதை இனி இழக்க மாட்டேன் என்று ஒரு நேர்காணலில் கூறியிருக்கின்றார்.
