இந்த மனசு எத்தனை பேருக்கு வரும்…? விபத்தில் சிக்கி உயிரிழந்த ‘நற்பணி மன்ற தலைவர்’… நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா… வைரலாகும் வீடியோ…

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர். இவர் நடிப்பில் தற்பொழுது கங்குவா திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. சினிமாவில் மட்டுமின்றி மக்கள் நலனிலும் அக்கறை கொண்டவர் நடிகர் சூர்யா.

   

நடிகர் சிவகுமாரின் மகன்களான நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி நடத்தி வரும் ‘அகரம்’ என்கிற அறக்கட்டளை மூலம் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தற்பொழுது படித்து வருகின்றனர். நடிகர் சூர்யாவுக்கென ரசிகர் மன்றங்களும், நற்பணி மன்றங்களும் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், சூர்யா நற்பணி இயக்கத்தின் ‘விழுப்புரம்’ மாவட்ட தலைவர், மணிகண்டன்  பிப்ரவரி 7ம் தேதி, சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்தார். இவரது இறப்பு செய்தியை அறிந்த நடிகர் சூர்யா அவரின் குடும்பத்தினரை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து இன்று நடிகர் சூர்யா விழுப்புரத்தில் உள்ள மணிகண்டன் வீட்டிற்கு நேரடியாக சென்று மலர் தூவி  அஞ்சலி செலுத்தினார். தற்பொழுது இதுதொடர்பான புகைப்படங்களும் , வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் ‘இந்த நல்ல மனசு எத்தனை பேருக்கு வரும்…?’ என்று அவரின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர்.

author avatar