Categories: CINEMA

“Deadly காம்போவா இருக்கே”… வெற்றிமாறனுடன் கூட்டணி போடும் சசிகுமார்.. மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் சூரி..

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கும் சூரி, காமெடியன் என்பதை தாண்டி ‘விடுதலை’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான இப்படம், சூரியின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்து, பாராட்டுகளை குவித்தது. கான்ஸ்டேபிள் கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்தி நடித்திருந்தார் சூரி.

‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், சூரிக்கு அடுத்தடுத்து, ஹீரோவாக நடிக்க வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கொட்டுக்காளி படத்திலும் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் சூரி. இதுதவிர மேலும் சில படங்கள் இவரின் கைவசம் உள்ளது.

ஹீரோவாக நடித்தாலும், தொடர்ந்து காமெடி வேடத்திலும் நடிப்பேன் என கூறியுள்ளார் நடிகர் சூரி. இந்நிலையில் தற்போது மீண்டும் வெற்றிமாறனுடன் இணையவுள்ளார் சூரி. இந்தப் படத்தின் பூஜை தற்போது போடப்பட்டுள்ளது.  இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திலும் சூரி நாயகனாகவே இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் இன்றைய தினம் பூஜையுடன் கும்பகோணத்தில் துவங்கியுள்ளது. இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கவுள்ள இந்தப்படத்திற்கு கதை எழுதியுள்ளார் வெற்றிமாறன்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். படத்தில் சூரியுடன் சசிக்குமாரும் முதன்மை கேரக்டரில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் படத்தில் உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஷிவதா நாயர், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர். மல்ட்டி ஸ்டார் கான்செப்டில் ஆக்ஷன் என்டர்டெயினராக இந்தப் படம் உருவாகவுள்ளது.தற்பொழுது இத்திரைப்படத்தின் பூஜை வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் சூரி.இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

லேடி கெட்டப்பில் அச்சு அசல் பெண் போல இருக்கும்.. இந்த பிரபல தொகுப்பாளர் யார் தெரியுமா ..? வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வளம் பெறுபவர் ஆசார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த…

19 mins ago

ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர்… மதுரையின் ‘சினிமா பேரடைஸோ’ தங்கம் தியேட்டரின் பிறப்பும் இறப்பும்… பலரும் அறியாத தகவல்கள்!

தமிழக மக்கள் ஆரம்ப காலம் முதலே இயல் இசை நாடகம் என கலைகளை ஊக்குவித்து வந்தவர்கள். ஒரு கட்டத்தில் மற்ற…

34 mins ago

கார் விபத்தில் உயிரிழந்த நடிகை.. துக்கம் தாங்காமல் காதலர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல தெலுங்கு சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது…

1 hour ago

“சுசித்ராவோட அப்பா அம்மா தற்கொலை பண்ணிக்கிட்டாங்க… கார்த்திக் அப்படிப்பட்டவர்னு கண்டுபிடிக்க இவ்ளோ வருஷம் ஆச்சா?” – கஸ்தூரி சரமாரி கேள்வி!

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…

1 hour ago

50 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் நடிகை சித்தாரா… அந்த பிரபல நடிகர் மேல் கொண்ட காதல்தான் காரணமா?

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போலவே இருந்து 80‘களின் இளைஞர்களை மனதைக் கொள்ளை கொண்ட நடிகை தான் சித்தாரா. 1986…

1 hour ago

“உன்மேல செம்ம பொறாமைல இருக்கேன்…” சுசித்ராவிடம் நேரடியாக சொன்ன அஜித்… காரணம் இதுதான்!

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…

4 hours ago