‘கிழக்கே போகும் ரயில்’ சுதாகர்  இப்ப எப்படி  இருக்காருன்னு தெரியுமா?… ஆள் அடையாளமே தெரியலையே… 

By Begam on ஆனி 23, 2023

Spread the love

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1978 ஆம் ஆண்டு ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் சுதாகர்.  தெலுங்கு திரையுலகில் வெற்றிகளை குவித்து வந்த இவருக்கு முதல் தமிழ் படமே, மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததால் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

   

இந்த படத்தை தொடர்ந்து, ‘மாந்தோப்புக்கிளியே’,  ‘பொண்ணு ஊருக்கு புதுசு’,  ‘கரை கடந்த ஒருத்தி’,  ‘நிறம் மாறாத பூக்கள்’ என தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து, தமிழ் பட கதாநாயகனாக தன்னை நிலை நிறுத்தி கொண்டார். இவரின் சுருட்டை முடி. கலையான முகம். கள்ளம் இல்லா சிரிப்புக்கு கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் இருந்தனர்.  எங்கு சென்றாலும் ரசிகர்களின் வரவேற்பு ஆரவாரம், இவரை சூழ்ந்தது.

   

 

இதனை சரியாக தக்கவைத்துக்கொள்ள தெரியாத நடிகர் சுதாகர் படப்பிடிப்பிற்கு குடித்து விட்டு வரும் அளவிற்கு திசைமாறி போனார். தெலுங்கிலும் பட வாய்ப்புகள் குறைந்தன. அதேபோல், தமிழிலும் இவர் நடித்த படங்கள் தோல்வியை தழுவியது. ஒரு நிலையில் தமிழ் ரசிகர்களே இவரை மறந்து போனார்கள். கடைசியாக இவர் நடிப்பில், தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் இவர் கதாநாயகனாக நடித்த படங்கள் சரியாக ஓடாததால் ஓரங்கட்டப்பட்ட இவர், பணத்திற்காக காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார். பின் முழு நேர காமெடி நடிகராக மாறிவிட்டார். தற்போது 60 வயதை கடந்த இவர், சமீப காலமாக உடல் நல பிரச்சனை காரணமாக மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்

இதைத்தொடர்ந்து நடிகர் சுதாகர் இறந்து இறந்ததாக வதந்திகள் பரப்பப்பட்டது. இந்நிலையில் நடிகர் சுதாகரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தில் நடிகர் சுதாகர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போய் காட்சியளிக்கிறார். இதோ அந்த  புகைப்படம்…