கன்னட சினிமாவில் முன்னணி நடிகர் கிச்சா சுதீப். தமிழில் புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். கடந்தாண்டில் தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் கிச்சா சுதீப் நடித்த மேக்ஸ் என்ற படம் பெரிய வெற்றியை பெற்றது. இப்போது கிச்சா சுதீப் நடித்த மார்க் என்ற படம், கடந்த 25ம் தேதி கன்னட மொழியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இந்த படம் தமிழில் ஜனவரி முதல் வாரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கிச்சா சுதீப் பற்றிய ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் கிச்சா சுதீப் சமீபகாலமாக அவர் நடிக்கும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்குவது இல்லை. அதற்கு பதிலாக கன்னட மொழியில் அந்த படத்தை வெளியிடும் முழு உரிமையை பெற்றுக் கொள்கிறார். கடந்த ஆண்டில் தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் சுதீப் நடித்த மேக்ஸ் படம் கன்னடத்தில் வெளியாகி பெரிய லாபத்தை அவருக்கு கொடுத்தது.
அந்த படம் தமிழில் சரியாக போகாததால் தயாரிப்பாளர் தாணுவுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இப்போது மார்க் படத்திலும் அதே பார்மூலாவை நடிகர் கிச்சா சுதீப் பாலோ அப் செய்திருக்கிறார். அதாவது மார்க் படம் கடந்த 25ம் தேதி கன்னட மொழியில் வெளியாகி பலத்த லாபத்தை கிச்சா சுதீப்புக்கு தந்து வருகிறது. ஆனால் தமிழில் அந்த படம் வெளியாகி நல்ல வசூல் கிடைத்தால்தான் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு லாபம் கிடைக்கும்.
ஒருவேளை கன்னடத்தில் பெரிய வெற்றியை பெற்ற மார்க் படம் தமிழில் சரியாக போகவில்லை என்றால், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் நஷ்டத்தை தான் சந்திக்க வேண்டும். இப்படி தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை முதலீடு போட்டு தனது படங்களை தயாரிக்க வைத்து அந்த படங்களை கன்னட மொழியில் நடிகர் சுதீப்பே சொந்தமாக வெளியிட்டு கணிசமான லாபமடைந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…
அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…
உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ஹாங்காங்கில் உள்ள 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்'…
தமிழகத்தில் அரசு ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய முதல் தகவல் அறிக்கையின்…
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து…
அரசியல் களத்தில் தனக்கெனத் தனிப்பாதையை அமைத்து, மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றி கழகம் அரியணை ஏறி…