கன்னட திரை உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் கிச்சா சுதீப். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய இவ்வாறு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். கன்னடத்தில் பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் தமிழில் நான் ஈ திரைப்படம் மூலமாக தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தென்னிந்திய சினிமாவில் இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.
அந்த திரைப்படத்தில் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். ஸ்டார் ஹீரோவான சுதீப் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை கொள்ளையடித்தார். தமிழில் அஜித் மங்காத்தா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததை போல் இவரை கூறலாம்.
இதனைத் தொடர்ந்து கன்னடத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தும் இயக்கியும் முன்னணி ஸ்டார் ஆக வலம் வரும் இவர் பிறமொழி திரைப்படங்களிலும் அதிக கவனம் செலுத்தினார். ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் அதிக திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் கன்னடம் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கினார்.
இப்படி சினிமா துறையில் மிகப்பெரிய ஸ்டார் ஆக இருக்கும் சுதீப் கடந்த 2001 ஆம் ஆண்டு பிரியா ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு சான்வி என்ற அழகிய ஒரு மகளும் உள்ளார். தற்போது சுதீப் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதனை பார்த்து ரசிகர்கள் சுதீப்புக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்காரா என கூறி வருகிறார்கள்.