“தமிழில் நடிக்க OK தான், ஆனா இது இருக்கணும்”.. சேரனிடம் கண்டிஷன் போட்ட சுதீப்..!!

By Nanthini on ஆவணி 21, 2024

Spread the love

கன்னட நடிகர் சுதீப் நடிகராக மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், கதை எழுத்தாளர் மற்றும் தொகுப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் இவர், நான் ஈ திரைப்படம் மூலமாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். இந்த திரைப்படத்தில் ஈயுடன் வல் கத்தும் இவருடைய கதாபாத்திரம் வில்லனாக இருந்த போதிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து தமிழில் ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.

   

கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வரும் இவர் , 20 ஆண்டுகளாக இந்திய அளவில் சிறப்பான நடிகராக தன்னை நிலை நிறுத்தியுள்ளார். இந்த நிலையில் இவர் இயக்குனர் சேரன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கடந்த வருடமே தகவல் வெளியானது. இது குறித்து சேரனிடம் கேட்டதற்கு, சுதீப் தமிழ் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால் பல கண்டிஷன் போடுகிறார்.

   

 

கதைக்கு முக்கியத்துவமும் ஆக்சன் நிறைந்த படங்களிலும் தான் நடிப்பேன் என்று கூறுகிறார். கன்னட திரைப்படங்களைப் போல தமிழில் எதிர்பார்ப்பதாகவும் அப்படி இருந்தால் மட்டுமே தான் நடிக்க தயார் என்றும் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். இந்த தகவலை சேரன் பகிர்ந்துள்ள நிலையில் தற்போது தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.