#image_title
சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் துணை இயக்குனராகவும் நடிகராகவும் தன்னுடைய சினிமா கேரியரை தொடங்கியவர் தான் திருச்செல்வம். அதன் பிறகு கோலங்கள் சீரியல் மூலமாக தன்னை இயக்குனராக நிலை நிறுத்திக் கொண்டார். கோலங்கள் சீரியலில் தொல்காப்பியன் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்த நிலையில் சுமார் ஐந்து ஆண்டுகள் ஓடிய இந்த சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்த சீரியலுக்குப் பிறகு அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி மற்றும் கைராசி குடும்பம் போன்ற பட சீரியல்களை திரு செல்வம் இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்திலும் இவர் நடித்திருந்தார்.
கோலங்கள் சீரியலுக்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் தான் எதிர்நீச்சல். இதில் நடிகை மதுமிதா கதாநாயகியாக நடித்திருந்த நிலையில் பார்வதி, வெங்கட்ராமன், கனிகா, ஹரிப்பிரியா இசை, பிரியதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். குறிப்பாக இந்த சீரியலில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து வில்லனாக நடித்திருந்தாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றார். ஆனால் திடீரென இவர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் புதிய குணசேகரன் ஆக வேலராமமூர்த்தி நடித்திருந்தார். இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் ஓரளவு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பிறகு சில நாட்களிலேயே இந்த சீரியல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சீரியலின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாகும் என்பது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கூடிய விரைவில் எதிர்நீச்சல் 2 சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் இந்த தொடரின் ப்ரோமோவும் சன் டிவியில் வெளியானது. முதல் பாகத்தில் நடித்த மதுமிதா இந்த தொடரில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக நினைத்தாலே இனிக்கும் என்ற தொடரில் நடித்த நாயகி பார்வதி நடிக்க உள்ளார்.
முதல் பாகத்தில் நடித்த கனிகா, ஹரிப்பிரியா இசை மற்றும் பிரியதர்ஷினி ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். இந்த நிலையில் குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போவது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குணசேகரன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் சுப்பு பஞ்சு அருணாச்சலம் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே கலகலப்பு மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் சில டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…