சினிமா ஹீரோயின் போல இருக்கும் நடிகை ஸ்ரீகாந்தின் மனைவி.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்..!!

By Priya Ram

Published on:

பிரபல நடிகர் ஆன ஸ்ரீகாந்த் சசி இயக்கிய ரோஜா கூட்டம் படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு உள்ளிட்ட அடுத்த அடுத்த சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.

   

கடந்த 2008-ஆம் ஆண்டு வந்தனா என்பவரை ஸ்ரீகாந்த் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 16 ஆண்டுகள் ஆகிறது.

ஆனால் இன்றும் இளம் ஜோடிகளாக வலம் வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் அவரது மனைவி வந்தனாவுடம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

அங்கு வைத்து எடுத்த புகைப்படங்களை வந்தனா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஸ்ரீகாந்த் பட்டு வேஷ்டி சட்டையிலும் வந்தனா பட்டு சேலையையும் அணிந்திருக்கிறார்.

அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் வந்தனா ஹீரோயினையே மிஞ்சும் அளவிற்கு அழகாக இருப்பதாக கமெண்ட் செய்கின்றனர். வயது ஏற ஏற இன்னும் அழகாக இருக்கிறார்கள் என கமெண்ட்ஸ்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

y
author avatar
Priya Ram