அந்த தயாரிப்பாளர் மிரட்டியதால் மணிரத்தினம் படத்தை மிஸ் பண்ணிட்டேன்.. ஓபன் ஆக பேசிய நடிகர் ஸ்ரீகாந்த்..!!

By admin on ஆனி 28, 2024

Spread the love

90’S காலகட்டத்தில் இருந்து தனி தமிழ் சினிமாவில் இளம்பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் ஸ்ரீகாந்த். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2002-ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடிப்பில் ரோஜா கூட்டம் படம் ரிலீஸ் ஆனது. முதல் படமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி ஸ்ரீகாந்த் நடித்தார்.

ஸ்ரீகாந்த் (நடிகர்) புதிய படங்கள் | Srikanth Upcoming Movies List in Tamil  - Filmibeat Tamil

   

ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, பம்பரக் கண்ணாலே, சதுரங்கம், நண்பன் உள்ளிட்ட படங்களில் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். ஒரு கட்டத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் ஸ்ரீகாந்த் தனது மார்க்கெட்டை இழந்தார். ஸ்ரீகாந்த் நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு மனசெல்லாம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சந்தோஷ் இயக்கினார். ஸ்ரீகாந்த் ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீகாந்த் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

   

கோலிவுட்டின் அடுத்த சென்சேஷனா!! நடிகை ஸ்ரீகாந்தின் மகளா இது? - தமிழ்நாடு

 

ஸ்ரீகாந்த் கூறியதாவது, ஆயுத எழுத்து படத்தில் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடிக்க நான் விரும்பினேன். அதற்கு தேர்வாகி சித்தார்த் கதாபாத்திரத்திற்கு நான் தான் நடிப்பதாக இருந்தது. அதற்கான டெஸ்ட் சூட் நடந்த பிறகு மணிரத்தினம் ஓகே சொல்லிவிட்டார். அதே நேரம் தான் மனசெல்லாம் படத்திலும் நடித்தேன். எதிர்பாராதவிதமாக ஒரு ஃபயர் ஆக்சிடென்டில் மாட்டிக் கொண்டேன். இதனால் முகத்தில் நெருப்பு பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மணிரத்தினம் எனக்காக காத்துக் கொண்டிருந்தார்.

வாங்கிய அட்வான்ஸை விட்டெறிந்த ஸ்ரீகாந்த்! மணிரத்னம் சொன்ன ஒரு வார்த்தை..  இன்று வரை தொடரும் மோதல் - CineReporters

நான் மருத்துவமனையில் கொஞ்சம் உடல்நலம் தேறி நலமானேன். இதனை அறிந்ததும் மனசெல்லாம் பட தயாரிப்பாளர் என்னை வந்து பார்த்தார். அவர் அட்வாண்டேஜ் எடுத்துக்கொண்டார். அக்ரீமெண்ட் போடப்பட்ட மனசெல்லாம் படத்திலும் அதற்கு அடுத்த படத்திலும் நடித்து முடித்துவிட்டு தான் வேறு படங்களில் நீ கமிட்டாக வேண்டும் அதுவரை யார் படத்தில் நடிக்க கூடாது என கூறிவிட்டார். இதனால் வேறு வழி இல்லாமல் மணிரத்தினம் சார் படத்தில் நடிக்க முடியாமல் போனது.

Srikanth (actor, born 1979) - Wikipedia

மேலும் ஆயுத எழுத்து பலத்திற்காக நான் வாங்கி அட்வான்ஸ் பணத்தையும் திருப்பி கொடுத்துவிட்டேன். இதனால் மணிரத்தினம் என் மீது கோபமாக இருந்தார். ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக எனக்காக அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நான் படத்தில் நடிக்க மாட்டேன் என கூறியதால் இனிமேல் உன்னை வைத்து நான் படம் எடுக்கவே மாட்டேன் என எனது முகத்துக்கு நேராக சொல்லிவிட்டார். அன்றிலிருந்து இன்று வரை மணிரத்தினம் இயக்கிய படத்தில் நான் நடிக்கவில்லை என ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

Director Mani Ratnam admitted to hospital due to corona virus | கொரோனா  பாதிப்பு காரணமாக இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி..!