ஆப்பிள் பெண்ணே பாடல் ஷூட்டிங்கை விட்டு கோபத்தில் கிளம்பிய பூமிகா.. சீக்ரெட்டை போட்டுடைத்த நடிகர் ஸ்ரீகாந்த்..!!

By Priya Ram

Published on:

பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான ரோஜா கூட்டம் படத்தின் மூலம் நடிகராக தனது பயணத்தை தொடங்கினார். இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பிறகு ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம் என அடுத்தடுத்த படங்களில் நடித்து ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் திரைப்படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

   

நடிகர் ஸ்ரீகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, தனது முதல் படமான ரோஜா கூட்டம் படத்தில் இடம்பெற்ற ஆப்பிள் பெண்ணே பாடல் சூப்பர் ஹிட் ஆனது. அந்தப் பாடல் இரண்டு முறை ஷூட்டிங் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது முறை ஷூட்டிங் வேறு ஒரு இடத்தில் நடைபெற்றது. டிராவல் செய்யும் போது பாதி வழியிலேயே பூமிகா கோபித்துக் கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு கிளம்பிவிட்டார்.

அவர் எதற்காக கோபப்பட்டார் என்பது எனக்கு இன்று வரை தெரியவில்லை. அவரை தேடி மூன்று மேனேஜர்கள் ஊர் ஊராக அலைந்தார்கள். மேலும் படத்தின் தயாரிப்பாளர் பாடலை எடுக்காமல் ஊருக்கு வரக்கூடாது என கண்டிப்பாக சொல்லிவிட்டார். இதனால் பூமிகாவுக்காக இரண்டு நாட்கள் காத்திருந்தோம்.

அவர் இனிமேல் வரப்போவதில்லை என்பதை அறிந்ததும் இயக்குனர் கூறியபடி நானாகவே அந்த பாடலை நடித்து முடித்து விட்டேன். ஒரு சில நாட்கள் பூமிகா இல்லாமலேயே நானாக நடித்த காட்சிகளையும், ஏற்கனவே பூமிக்காவுடன் வேறு ஒரு டான்ஸ் மாஸ்டரை வைத்து எடுக்கப்பட்ட காட்சிகளையும் ஒன்றாக இணைத்து அந்த பாடலை வெளியிட்டோம். அந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனது என பல வருட சீக்கிரட்டை போட்டுடைத்தார் நடிகர் ஶ்ரீகாந்த்.

 

View this post on Instagram

 

A post shared by YouThamizha (@youthamizha)

author avatar
Priya Ram