தமிழ் சினிமாவில் ரசிகைகளால் சாக்லேட் பாயாக கொண்டாடப்படுபவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் 2002ல் வெளியான ‘ரோஜா கூட்டம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அதிகமான பெண் ரசிகைகளை கவர்ந்தார். ‘ரோஜா கூட்டம்’ படத்திற்கு பிறகு பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

ஏப்ரல் மாதத்தில், பூ, பார்த்திபன் கனவு, மெர்க்குரி பூக்கள், ஜூன் மற்றும் சதுரங்கம் என பல திரைப்படங்களில் நடித்தார். இதன் மூலம் அவர் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். இவர் நடிகை சினேகாவுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கினார். இறுதியாக இவர் இயக்குனர் சுந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘காபி வித் காதல்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சரியான கலெக்ஷனை பெறவில்லை. இவர் வந்தனா என்பவரை 2008ல் திருமணம் செய்து கொண்டார். நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு அகில் மற்றும் அகானா என ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் ஸ்ரீகாந்தியின் மனைவி வந்தனா.

இவர் அவ்வப்பொழுது தனது போட்டோசூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது இவர் சமீபத்தில் நடந்த பார்ட்டி ஒன்றில் தனது கணவருடன் கலந்து கொண்டுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்பொழுது இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

