இந்த ஆண்டு தொடக்கத்தில் கூட விடுதலை 2 திரைப்படம் வெளியாகி இருந்த நிலையில் இந்த படத்திலும் கதாநாயகனாக சூரி அசத்தி இருந்தார். தற்போது மாமன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அடுத்ததாக மண்டாடி ஏற்ற திரைப்படத்தில் சூரியன் நடித்து வருகின்றார். இந்தத் திரைப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகின்றார். படத்திற்கு ஜிபி பிரகாஷ் இசையமைக்கும் நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு நேற்று வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் சூரி ஒரு மீனவராக நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடலில் நடக்கும் படகு விளையாட்டுப் போட்டியை மையமாகக் கொண்டு உருவாக்கி வருகின்றது.
நேற்று படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூரி, என்னோட இந்த படத்தின் தொடக்கத்திற்கு இவ்வளவு பிரம்மாண்டமாக செய்ததற்கு ரொம்ப நன்றி. நான் எல்லா மேடைகளிலும் கூறுவது தான். நான் எந்த அளவுக்கு இருக்கும் காரணம் இயக்குனர் வெற்றிமாறன் மட்டும்தான். இந்த இடத்தில் அண்ணனுக்கு மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து விடுதலை படத்தை இயக்கியதற்கு நன்றி. சுசீந்திரன் அண்ணன் எனக்கு வாய்ப்பு கொடுத்து பல படங்களில் நடித்தேன். அதன் பிறகு வெற்றிமாறன் அண்ணன் என் மீது வைத்த நம்பிக்கையில் அவர் கொடுத்த வாய்ப்பில் கதாநாயகனாக மாறி இருக்கிறேன்.
பெயிண்டராக இருந்து நடிகராக மாறி இதுவரைக்கும் என் தகுதிக்கு மீறி நல்லா சம்பாதித்து விட்டேன்.எதுவுமே இல்லாம தான் சினிமாவிற்குள் வந்தேன். என்னுடைய சக்திக்கு மீறி தற்போது சினிமாவில் சம்பாதித்து விட்டேன். இது போதும் எனக்கு. இனி வரும் நாட்களில் எனக்கு பிடித்த படங்களில் நடித்தால் மட்டும் போதும். வாழ்க்கையை நடத்துவதில் இறைவன் பாக்கியத்தோடு என்னை கலைத்தாய் பார்த்துக் கொண்டால் போதும். விடுதலை வெற்றிமாறன் அண்ணனால் சிறப்பாக அமைந்தது. அதன் பிறகு கருடன் படமும் அவர் மூலமாக அவருடன் நிறைய பங்களிப்பில் சிறப்பாக அமைந்தது.
தற்போது இந்தப் படமும் அவர் மூலமாக அவரோட பங்களிப்பில் நடப்பது மிகுந்த மகிழ்ச்சி. எனக்கு எப்போதும் வெற்றி அண்ணன் துணையாக இருக்கின்றார். இந்தப் படத்தோட கதையை வெற்றிமாறன் அண்ணன் கிட்ட சொல்லி படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னதும் அவர் எனக்கு சில விஷயங்களை கூறி அறிவுரை சொன்னார். இந்த படம் நல்லா வரும் ஒரு குடும்ப கதையோட எல்லாருக்கும் பிடிக்கும் என்று அவர் சொன்ன பிறகு தான் நான் படத்தில் நடித்தேன் என்று சூரி மேடையில் பேசியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…