நடிகர் சூரி தனது அடுத்த படமான ‘மண்டாடி’ படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் ஒரு ரசிகர் எக்ஸ் தளத்தில் , மண்டாடி படப்பிடிப்பு எங்கள் ஊரில் நடப்பது மகிழ்ச்சி. ஆனால் இரவு நேர படப்பிடிப்பில் வேடிக்கை பார்க்க வரும் மக்களிடம் பவுன்சர்கள் கடுமையாக நடந்துகொள்கிறார்கள் என பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த நடிகர் சூரி, தம்பி, உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி.
படப்பிடிப்பில் ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இதை தயாரிப்புக் குழுவிடமும், பவுன்சர்ஸ் சகோதரர்களிடமும் தெரிவித்து இனி மிகுந்த கவனத்துடன் இருக்கச் சொல்கிறோம். எப்போதும் போல உங்கள் அன்பே எங்களுக்கு பலம். மீண்டும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
