சாலையோர தள்ளுவண்டி கடையில் தோசை சுட்ட நடிகர் சோனு சூட்.. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!

By Nanthini on பங்குனி 2, 2025

Spread the love

பாலிவுட்டில் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் சோனு சூட். நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியவர். அதன்பிறகு சிம்பு நடித்த ஒஸ்தி, சூப்பர் ஸ்டார் நடித்த சந்திரமுகி உள்ளிட்ட திரைப்படங்களில் முரட்டு வில்லனாக நடித்திருப்பார். அதனைப் போலவே பல்வேறு ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் வில்லன் ரோலில் நடித்து மிரட்டி உள்ளார். திரையில் வில்லனாக இருந்தாலும் கொரோனா காலகட்டத்தில் அடுத்தடுத்து இவர் செய்த உதவிகளால் நிஜத்தில் ஹீரோ என்பதை நிரூபித்து காட்டினார்.

தமிழர்கள் என்றதும் ஓடோடி வந்த சோனு சூட்.. ரஷ்யாவில் சிக்கியவர்களுக்கு தமிழகம் திரும்ப உதவி.. சல்யூட் | Actor Sonu Sood helped Tamil students to get back to Chennai ...

   

குறிப்பாக கொரோனா லாக்டவுன் காலத்தில் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்தது மட்டுமல்லாமல் நம்ம ஊர் மருத்துவ மாணவர்கள் ரஷ்யாவிலிருந்து சென்னை திரும்ப தனி விமானம் ஏற்படுத்தி கொடுத்தது என கணக்கில் இல்லாத பல உதவிகளை செய்தார்.

   

நடிகர் சோனு சூட்டுக்கு பிடிவாரண்ட்... மோசடி வழக்கில் பஞ்சாப் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

 

அதன்பிறகு தனது சோசியல் மீடியா பக்கங்களில் நாளுக்கு நாள் உதவி கேட்டு வருவோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்ததோடு தற்போது வரை தன்னுடைய உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றார். அதுமட்டுமல்லாமல் அடுத்தடுத்து உதவி கேட்போருக்கு கொடுப்பதற்காக தன்னுடைய பெயரிலும் மனைவி சோணாதி பெயரிலும் உள்ள இரண்டு கடைகள் 6 குடியிருப்புகள் என மொத்தம் எட்டு சொத்துக்களை 10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார்.

Sonu Sood Supports Swiggy Delivery Boy | சோனு சூட்

இப்படி மக்கள் சேவையில் தீவிரமாக இறங்கியுள்ளதால் மக்கள் இவரை ரியல் ஹீரோவாக பார்ப்பதால் பல படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகின்றார். இப்படியான நிலையில் சோனு சூட் சென்னையில் தெருவோரமாக உள்ள தள்ளுவண்டி இட்லி கடை ஒன்றுக்குச் சென்று அங்கு அவரே தோசை சுட்டு அங்கிருந்தவர்களுக்கு கொடுத்துள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.