Connect with us

அவமதிப்பை தாங்காத மனுஷன்..! ஒரு சீரியல் நடிகையால் தான் நடிப்பதையே கைவிட்ட சிவகுமார்..

CINEMA

அவமதிப்பை தாங்காத மனுஷன்..! ஒரு சீரியல் நடிகையால் தான் நடிப்பதையே கைவிட்ட சிவகுமார்..

 

தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் கடந்து சென்றாலும் இன்று நடிப்பாலும், குணத்தாலும் சிறந்த நடிகராக பார்க்கப்படுபவர்கள் சிலர். அப்படிப்பட்ட நடிகர்களில் நடிகர் சிவகுமாரும் ஒருவர். தற்போது இருக்கும் தலைமுறையினருக்கு கூற வேண்டுமென்றால் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி அவர்களின் தந்தை ஆவார். பழம்பெரும் நடிகரான இவர் 1956 ஆம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

   

அதைத்தொடர்ந்து திருமால் பெருமை, இராஜராஜ சோழன், ஆண் பிள்ளை, சிங்கம், பட்டிக்காட்டு ராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கின்றார். சினிமா மட்டும் இல்லாமல் சீரியல்களிலும் நடித்த அசத்தி இருக்கின்றார். தான் உண்டு தன் நடிப்புண்டு என்று வேலையில் மட்டும் கவனம் செலுத்தும் ஒரு சிறந்த நடிகர்,

எந்த கிசுகிசுவிலும் வதந்திகளிலும் சிக்காத ஒரே நடிகர் என்ற கூறலாம் . இவரைப் போலவே இவரது மகன்களும் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக இருந்து வருகிறார்கள். சூர்யா மற்றும் கார்த்திக் தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்கள். இவரது குடும்பமே ஒரு கலை குடும்பம் என்று கூறலாம்.

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என பன்முகத்தன்மையாக இருந்த சிவகுமார் இதுவரை 190 திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். 2001 ஆம் ஆண்டு அஜித்தின் வெளிவந்த பூவெல்லாம் உன் வாசம் திரைப்படம் தான் இவர் நடிப்பில் வெளிவந்த கடைசி படம். அதன் பிறகு சின்னதிரையில் கால் பதித்த இவர் வீட்டுக்கு வீடு வாசப்படி, பந்தம், சித்தி, அண்ணாமலை, லட்சுமி போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்து இருக்கின்றார்.

தொடர்ந்து சின்ன திரையில் நடித்து வந்த சிவகுமார் நடிப்பை நிறுத்திக் கொண்டார். அதற்கான காரணம் இதுவரை தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது அவர் நடிப்பை நிறுத்தியதற்கு ஒரு சிறிய நடிகை தான் காரணம் எனக் கூறப்படுகின்றது. பொதுவாக அந்த காலத்தில் ஒரு நடிப்பு சீன் எடுக்கப் போகிறார்கள் என்றால் படத்தில் வேலை செய்பவர்களும் அவ்வளவு ஒத்துழைப்பு கொடுப்பார்களாம் .

அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு காட்சியை கூறலாம். அதாவது சிவாஜி கணேசன் படத்தில் ஒரு காட்சியை இயக்குனர் கூறி இருக்கின்றார். அதை கேட்ட சிவாஜி எனக்கு ஒரு நாள் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு வந்தாராம். மறுநாள் அவர் ஷூட்டிங்க்கு வரும் போது படப்பிடிப்பு தளத்தில் ஒரு துளி சத்தம் கூட வரவில்லை. அந்த காட்சி மிகச் சிறியது என்றாலும் மிகவும் தத்ரூபமாக உணர்ச்சிபூர்வமாக நடித்திருந்தார் சிவாஜி.

அதை பார்த்த அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர். அப்படி படத்தில் ஒரு நடிகர் நடிப்பதற்கு அருகில் இருப்பவர்களும் மிகச் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தனர். ஆனால் சிவக்குமார் சின்னத்திரையில் ஒரு சீரியலுக்காக நடித்துக் கொண்டிருந்தபோது அந்த செட்டில் சீரியல் நடிகை ஒருவர் போனில் மிக சத்தமாக பேசிக் கொண்டிருந்தார். சிவக்குமார் அந்த நடிகையிடம் சென்று நான் எவ்வளவு உணர்ச்சி பூர்வமாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.

இவ்வளவு சத்தமாக பேசினால் நான் எப்படி நடிக்க முடியும் என்று கூறி இருக்கிறார்.  ஆனால் அந்த நடிகையோ இத்தனை வருஷமா நடிச்சிட்டு வரிங்க. நீங்க பேசுறத டப்பிங்ல மாத்திக்கலாமே என்று பேசிவிட்டு மீண்டும் ஃபோன் பேச சென்று விட்டாராம். இந்த சம்பவத்தால் மனம் உடைந்த சிவகுமார் இனி நான் நடிக்கவே மாட்டேன் என்று கூறிவிட்டாராம். அதன் பிறகு திரையில் தோன்றுவதை நிறுத்திவிட்ட சிவக்குமார் படிப்பது எழுதுவது ஓவியம் வரைவது என தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top