3-வது முறையாக கர்ப்பமாக இருக்கிறாரா சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி..? வைரலாகும் வீடியோ..!

By Mahalakshmi on மே 30, 2024

Spread the love

நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி மூன்றாவது முறை கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா என்கின்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் தற்போது முன்னணி நடிகராக கலக்கி வருகின்றார்.

   

ஆரம்பத்தில் எதிர்நீச்சல், ரஜினி முருகன் உள்ளிட்ட கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் தற்போது தயாரிப்பாளர், பாடகர். எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக மாறி இருக்கின்றார். தற்போது கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

   

இப்படத்தை முடித்துவிட்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். பின்னர் டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு திரைப்படமும் வெங்கட்ரபு இயக்கத்தில் ஒரு படமும் கடைசியாக சுதா கொங்குரா இயக்கத்தில் ஒரு படத்திலும் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படி தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

 

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் திரைப்படத்தின் டீச்சர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்து சிவகார்த்திகேயன் முதன்முறையாக அமரன் திரைப்படத்தில் ராணுவ வீரர் போல் நடித்து இருக்கின்றார். இதற்காக கடும் பயிற்சியை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.

மேலும் படத்தின் காட்சிகள் காஷ்மீர், சென்னை, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டது. இப்படி படங்களில் பிஸியாக நடித்து வரும் சிவகார்த்திகேயன் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஆராதனா மற்றும் குகன் என்கின்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சென்னையில் சொந்தமாக வீடு கட்டி இருந்து வரும் சிவகார்த்திகேயன் இந்த 11 ஆண்டுகளில் 125 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்து இருக்கின்றார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி மூன்றாவது முறை கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி இருவரும் ஒரு பிறந்தநாள் விழாவிற்கு சென்றிருக்கிறார்கள். அப்போது ஆர்த்தி கர்ப்பமாக இருப்பது போல் தெரிந்தது. இதை வெளியிட்ட ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.