தமிழ் சினிமா இயக்குனர்கள் பலரும் பாலிவுட்டில் முன்னணி நடிகர்களை வைத்து படங்களை எடுத்தாலும் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்கள். தெலுங்கில் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை கொடுத்த இயக்குனர் சங்கரால் கூட ரசிகர்களை கவரும் வகையில் படத்தை எடுக்க முடியவில்லை. ஆனால் பாலிவுட்டுக்குச் சென்று ஷாருக்கான் வைத்து ஜவான் படத்தை இயக்கி சுமார் 1100 கோடி வசூல் சாதனையை அட்லீ அசால்ட் ஆக செய்தார். ராஜமவுலி, பிரசாந்த் நீல் மற்றும் சுகுமார் வரிசையில் இந்தியாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக மாறியுள்ள அட்லி அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து படமெடுக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆரம்பத்தில் அட்லி சல்மான் கான் வைத்து பான் இந்தியா படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதை கைவிடப்பட்டு தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு மாசான கமர்சியல் படத்தை இயக்க உள்ளார். இந்தத் திரைப்படம் சுமார் 600 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை இயக்க இயக்குனர் அட்லீக்கு 100 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாகவும் இதில் ஹீரோவாக நடிக்கும் அல்லு அர்ஜுன் 300 கோடி சம்பளம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படியான நிலையில் இப்படத்தில் மற்றொரு மாஸ் ஹீரோ இணைந்து இருக்கிறார். அதாவது சிவகார்த்திகேயன் தான் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளாராம். அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனும் இயக்குனர் அட்லீயும் நெருங்கிய நண்பர்கள். அட்லி இயக்குனர் ஆவதற்கு முன்பு சில குறும்படங்களை இயக்கிய நிலையில் அதில் சிவகார்த்திகேயன் நடித்த முகப்புத்தகம் குறும்படமும் ஒன்று.
அதன் பிறகு ராஜா ராணி படத்திலேயே சிவகார்த்திகேயன் நடிக்க முயற்சித்த அட்லி தற்போது அவருடன் முதல் முறையாக கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் அமரன் திரைப்படம் மூலமாக மிகப் பெரிய வெற்றியை கொடுத்த சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக தானும் ஒரு பான் இந்தியா ஸ்டார் ஆக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் பான் இந்தியா ஸ்டாருடன் இணைந்து நடிக்க உள்ளார்.