தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்த இவர், 3, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவருக்கென தற்பொழுது பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் நடிப்பில் வெளியான மாவீரன், அயலான் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் எஸ்கே 21 படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார்.

இதை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இன்னும் வெளிவரவில்லை. தற்பொழுது ரஜினி, விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, கார்த்தி வரிசையில் கோலிவுட்டில் அடுத்ததாக வசூலில் கலக்கி வரும் நடிகராக உள்ளார்.

சமீபத்தில் சம்பள பிரச்சனை காரணமாக சம்பளத்தை குறைத்துக்கொண்ட சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கப்போகும் படத்திற்கு டபுள் மடங்கு அதாவது ரூ. 70 கோடி வரை உயர்த்த இருப்பதாக கூறப்படுகிறது. எப்படியோ 100 கோடியை நெருங்கிட்டாரே நம்ம சிவகார்த்திகேயன் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தயாரிப்பாளர்கள் பாடு திண்டாட்டம் தான்.
