#image_title
தொகுப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக மாறியவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான ‘மாவீரன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து பொங்கல் பண்டிகையையொட்டி சிவகார்த்திகேயன் -ரவிக்குமார் கூட்டணியில் அயலான் படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் இந்தப் படம் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. ஏலியனை மையமாக வைத்து சயின்ஸ் பிக்ஷன் படமாக வெளியான இந்தப் படம் குழந்தைகளை கவர்ந்தது.
இந்நிலையில் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவம் தயாரித்து வருகிறது.
படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 90 சதவிகித சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 10 சதவிகித சூட்டிங் பாக்கி உள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு ‘அமரன்’ என்று பெயரிட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே 23 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது 39வது பிறந்தநாளை நேற்று படக்குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.
மேலும் தனது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணியைப் பரிமாறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர்…
தேர்தல் தோல்விக்குப் பின்பும் டிடிவி தினகரன் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணியில் வலுவான அரசியல் கணக்குகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.…
தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா…
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவைப் பற்றியது இந்த செய்தி. அதில், 'வொர்க் ஃபிரைம் ஹோம்' என்பது பலருக்குக்…
தமிழக முதலமைச்சர் விஜய் ஊழலற்ற மற்றும் நேர்மையான ஆட்சியை நடத்தி வருவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ…
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசியல் களம் மற்றும் கட்சியின் எதிர்கால வியூகம்…