அடேங்கப்பா…! நடிப்புக்காக இவ்வளவு மெனக்கெடுவாரா?…. “தில்லானா மோகனாம்பாள்” படத்துக்காக நடிகர் சிவாஜி செய்த செயல்….!!!

By Mahalakshmi

Published on:

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிறந்த படங்களை பட்டியலிடுகையில் அதில் கட்டாயம் இடம்பெறும் திரைப்படம் தில்லானா மோகனாம்பாள். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. சிவாஜியின் நடிப்புக்கு தீனி போட்ட படங்களில் இதுவும் ஒன்று. இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 56 வருடம் ஆகின்றது. 1968 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வந்தது.

sivaji

இந்த திரைப்படத்தில் நடந்த சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் நடிகர் சித்ரா லட்சுமணன். அருட்செல்வன் ஏபி நாகராயன் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் தில்லானா மோகனாம்பாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இந்த திரைப்படம் 122 வது திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் நடித்ததற்கு எவ்வளவு மெனக்கட்டு இருக்கிறார் என்றால் தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்திலேயே சிக்கல் சண்முகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

   
Thillana Mohanambal

சிவாஜி கணேசன் திரையில் அவர் நாதஸ்வரத்தை வாசித்திருந்த போதிலும் அந்த இசைக்கு சொந்தக்காரர் என்றால் அது எம்பிஎன் சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள் தான். அந்த படத்திற்காக அவர்களின் இசையை பதிவு செய்வதற்கு முன்னாலேயே அவர்களை அழைத்த இயக்குனர் சிவாஜி கணேசன் முன்பாக அதனை வாசித்துக் காட்ட வேண்டும் என்று கூறி இருக்கிறார். உடனே இவர்களுக்கு படபட வேண்டும் என்று ஆகிவிட்டதாம்.

Thillana Mohanambal

அவர் முன்பு எப்படி வாசிப்பது என்று தயங்கி ஒருவழியாக வாசித்து முடித்துள்ளார்கள். இதை பார்த்து பிரமித்துப்போன சிவாஜி கணேசன் அவர்களை கட்டி தழுவி மனதார பாராட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து அவர்களைப் போலவே தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் நடித்து அசத்தியிருந்தார். இந்த திரைப்படத்தை திரையில் பார்த்த சேதுராமன் பொன்னுச்சாமி சகோதரர்கள் அவர்தான் அசல் நாங்கள் நகல் என்பது போல் உணர்ந்தார்களாம். அவ்வளவு சிறப்பாக அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் என்று சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.

author avatar
Mahalakshmi