தண்டோரா என்ற படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி நடித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் தண்டோரா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. அதில் நடிகர் சிவாஜி பேசிய சில கருத்துக்களால் சர்ச்சை உருவானது. அந்த நிகழ்ச்சியில் சிவாஜி பேசியதாவது, பெண்களின் அழகு சேலையில்தான் தெரிகிறது. அங்கங்கள் தெரியும்படி உடைகள் அணிவது பிரச்சனையை தான் வரவழைக்கும்.
ஹீரோயின்கள் கண்டபடி ஆடைகள் அணிந்தால் நீங்கள்தான் பிரச்சனைகளை சந்திக்க வேண்டும். என்னை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அப்படி எடுத்துக் கொண்டாலும் எனக்கு பிரச்சனை இல்லை. உங்கள் அழகு சேலையில் தானே தவிர உடலில் அங்கங்கள் தெரியும்படி அணியும் ஆடையில் இல்லை. சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என்று பேசியிருந்தார். இது இணையத்தில் வைரலானது.
இதுகுறித்து தொகுப்பாளினி மற்றும் நடிகையான அனசுயா தன்னுடைய கருத்தை காட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ஒரு பதிவில், யார் என்ன உடை அணிய வேண்டும் என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். ஆடை என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். சிவாஜியின் மனநிலையை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன் என்று அனசுயா கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
