அந்த சீன் நடிக்க தெரியாம திணறிய நடிகை.. உடனே சிவாஜி செய்த தரமான செயல்.. பலரும் அறியாத சுவாரஸ்ய சம்பவம்..!

By Nanthini on ஆவணி 19, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர்தான் சிவாஜி. இவருக்கு நடிகர் திலகம் என்ற பட்டமும் உள்ளது. தான் அறிமுகமான பராசக்தி என்ற திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்ற இவர் பல திரைப்படங்களில் நடித்த தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வந்தார். இவர் மறைந்தாலும் இவருடைய பெயர் இன்னும் சினிமாவில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இப்படி பல புகழுக்குரிய சிவாஜி நடிகை சரோஜாதேவிக்கு ஒரு உதவி செய்துள்ளார். எம்ஜிஆர் உடன் அதிக திரைப்படங்களில் நடித்துள்ள சரோஜா தேவி சிவாஜியுடன் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

சிவாஜியுடன் பாலும் பழமும், பார்த்தாலே பசி தீரும், ஆலயமணி, பாக பிரிவினை மற்றும் இருவர் உள்ளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சிவாஜியுடன் பாகப்பிரிவினை திரைப்படத்தில் நடிக்கும் போது படப்பிடிப்பு சமயத்தில் செய்வது அறியாமல் ஓரமாக சரோஜாதேவி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிவாஜி, என்ன நடந்தது ஏன் இப்படி நின்று கொண்டிருக்கிறாய் என கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த சரோஜாதேவி, அடுத்த ஷூட்டில் பிரசவ சீன் வைத்துள்ளனர்.

   

 

நானும் திருமணம் ஆகாதவள் என்னால் எப்படி பிரசவ வலிகளை உணர்ந்து தத்ரூபமாக நடிக்க முடியும் என்று கூறியுள்ளார். உடனே சிவாஜி கீழே உருண்டு திரண்டு பிரசவ வலியால் துடிப்பது போல நடித்துக் காட்டியுள்ளார். இதனை கண்டு வியந்து போன சரோஜாதேவி அவரைப் போலவே நடித்து அந்த படத்தில் அசத்தினார். அந்த படம் சூப்பர் ஹிட் கொடுத்ததாக அவரே கூறியுள்ளார். இந்த சுவாரசியமான சம்பவம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.