ரத்தக் கண்ணீர் படத்துக்கு அப்புறம் சினிமா வேண்டாம்னு போயிட்டார்… அவர திரும்ப அழைத்து வந்தவன் நான் – ராதிகாவிடம் சிவாஜி பகிர்ந்த தகவல்!

By vinoth on செப்டம்பர் 23, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர்களில் ஒருவர் சிவாஜி கணேசன். பி யு சின்னப்பா, எம் ஆர் ராதா, பாலையா என சிறந்த நடிகர்களின் வரிசையில் பராசக்தி மூலமாக அதிர்வலையை உருவாக்கியவர் சிவாஜி கணேசன். அதன் பிறகு 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடிகர் திலகமாக வலம் வந்தார். ஆனால் அவருக்கு ஒரு முறை கூட நடிப்புக்கான தேசிய விருது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு பத்தாண்டுகளுக்குப் பிறகு 1954 ஆம் ஆண்டு ரத்தக் கண்ணீர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. ரத்தக் கண்ணீர் திரைப்படம் 1954 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது. அதனால் எம் ஆர் ராதா முன்னணி கதாநாயகன் ஆகி நிறையப் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அடுத்த நான்கு ஆண்டுகள் அவர் எந்தப் படத்திலும் நடிக்கவேயில்லை.

   

m r radha and sivaji in paava mannippu

   

அதுபற்றி பல ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் சிவாஜி கணேசன், ராதிகாவோடு நடந்த ஒரு உரையாடலில் பேசியுள்ளார். அதில் “ரத்தக் கண்ணீர் திரைப்படம் ரிலீஸானதும், உங்கப்பா எனக்கு நாடகமே போதும் என சொல்லிவிட்டு போய்விட்டார். நாடகத்திலும் நடியுங்கள் சினிமாவிலும் நடியுங்கள் என அவரை அழைத்து வந்தவர்களில் நானும் ஒருவன்.” எனக் கூறியுள்ளார்.

 

மேலும் ராதிகா உங்களுக்கு இடையில் இருந்த நெருக்கமான நட்பைப் பற்றி சொல்லுங்கள் எனக் கேட்டபோது “எங்களுக்குள் இருந்தது நட்பு என்று சொல்ல முடியாது. அவர் எனக்கு மூத்த சகோதரன் மாதிரி. சொல்லப்போனால் எனக்கு ஒருவகையில் அவர் எனக்கு குரு மாதிரி. நான் நாடகத்தில் சிறுவனாக சென்றபோதே அவர் அங்கிருந்தார். அவர் மேல் எங்களுக்கெல்லாம் பயம் கலந்த மரியாதை உண்டு’ எனக் கூறியுள்ளார்.