தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பலத்த காற்று மற்றும் தொடர் கனமழை காரணமாக சென்னையில் வசித்து வந்த மக்கள் பலரும் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கான்கிரீட் வீடுகள் மற்றும் அப்பார்ட்மெண்ட் வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால் பலரும் சிக்கிக் கொண்டனர். இவர்களுக்கு அரசு பல உதவிகளை செய்து வரும் நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பலரும் உதவி செய்து வருகிறார்கள். தற்போது நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னையில் மீண்டும் வெள்ளம் வந்து மக்கள் தவித்து வருகின்றனர் கடவுள் அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு வெள்ளம் காரணமாக கனமழை கொட்டி தீர்த்த நிலையில் மொத்த சென்னையும் நீரில் மூழ்கியது.
அப்போது பிரபலங்கள் பலரும் உதவிய நிலையில் குறிப்பாக நடிகர் சித்தார்த் தேசிய ஊடகங்கள் மீது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி நேரடியாக அவர்களை தொடர்பு கொண்டு பேசினார். அது மட்டுமல்லாமல் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் மக்களுக்கு செய்தார். அப்போது நடிகர் சித்தார்த் செய்த செயல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியக்க வைத்தது. இதனால் பல பாராட்டுகளும் குவிந்த நிலையில் தற்போது சென்னை வெள்ளநீரில் தத்தளித்து கொண்டிருக்க சித்தார்த் சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியூரில் இருக்க கடவுள் சென்னை மக்களை காப்பாற்ற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது.
சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…
நடிகர் சுகுமார் தனது முகநூல் பக்கத்தில், 2002-ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆரின் தொடக்க காலத் தெலுங்குப் படப்பிடிப்பில் நடந்த ஒரு…
சென்னையில் நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் நடிகர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைதான விவகாரத்தில், சர்வதேச அளவில் இயங்கும் மாபெரும் போதைப்பொருள் கடத்தல்…
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…