Actor Singamuthu

வேற தொழில் பண்ணிட்டு பார்ட் டைம்ல தான் சினிமாவில் நடிக்கணும்… நடிகர் சிங்கமுத்து சொன்னதை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்!

By Elango on மாசி 22, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் பல படங்களில் சின்ன சின்ன காமெடி ரோல்களில் நடித்தவர் நடிகர் சிங்கமுத்து. குறிப்பாக நடிகர் வடிவேலுவுடன் ஏராளமான காமெடி காட்சிகளில் நடித்தவர். வடிவேலு சிங்கமுத்து காமெடி காம்போ பல படங்களில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு கட்டத்தில் வடிவேலு சிங்கமுத்து இடையே மோதல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சிங்கமுத்து கூறியதாவது, சினிமாவில் காமெடி காட்சிகளில் நடிக்கறதுக்கு சம்பளம்ன்னு பெருசா எதுவும் தர மாட்டாங்க. ஒரு நாளைக்கு 2000 அல்லது 3000 ரூபாய் தான் தருவாங்க. என்னை மாதிரி ஆட்கள் எல்லாம் சினிமாவை நம்பி இருக்கிறது இல்லே. வேற ஏதாச்சும் தொழில் பண்ணிக்கிட்டு தான் பார்ட் டைம்ல காமெடியனாகவும் நடிச்சுட்டு இருந்தோம் என்று நடிகர் சிங்கமுத்து கூறியிருக்கிறார்.