இந்தப் பள்ளி பருவ புகைப்படத்தில் கியூட்டாக இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா?… இதோ பாருங்க…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் சிம்பு. இவர் தனது ரசிகர்களால் ‘சிலம்பரசன்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இவரின் தந்தை நடிகர் டி.ராஜேந்திரன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தந்தையை போன்றே மகனும் தற்பொழுது திரையுலகில் கால் பதித்து கலக்கி வருகிறார்.

   

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இத்திரைப்படம் நல்ல விமர்சனத்தையும் வசூலில் சாதனையும் படைத்தது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்துதல’ திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம் மார்ச் 30ஆம் தேதி ரிலீசாக உள்ளது. மேலும் இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கமலஹாசன் இயக்க உள்ள திரைப்படத்தில் நடிகர் சிம்பு கமிட்டாகியுள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘எஸ்டிஆர் 48’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் நடிக்க நடிகர் சிம்பு மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை மூன்று மாதங்களாக தாய்லாந்தில் தங்கி பயிற்சி பெற்று, தற்போது நாடு திரும்பியுள்ளார். இத்திரைப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் சிம்புவின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகர் சிம்புவா இது?இவ்ளோ கியூட்டா இருக்காரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…