நடிகர் சித்தார்த்தா இது?… ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாரே… வைரலாகும் புகைப்படம்….

By Begam on ஆவணி 22, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இதைத்தொடர்ந்து ஆயுத எழுத்து, எனக்குள் ஒருவன், காவியத்தலைவன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார் நடிகர் சித்தார்த்.

   

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் ஆங்கிலத்திலும் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகராக மட்டுமல்லாமல் கதையாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் என பன்முக திறமைகளோடு திரையுலகில் வலம் வந்து கொண்டுள்ளார்.

   

 

 

 தற்பொழுது இவர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன்2’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவ்வப்பொழுது சர்ச்சைகளில் சிக்கும் இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விட சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானதே அதிகம்.  இந்நிலையில் நடிகர் சித்தார்த் நடிப்பில், அருண்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’சித்தா’.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீஸ்க்கு தயாரானது. இந்த நிலையில் இந்த படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் செய்து உடன் கூடிய போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் நடிகர் சித்தார்த்தா இது? என்று ஆச்சரியத்தில் உள்ளனர்.