Categories: சினிமா

சின்மயி சொன்னாங்க ஏதாவது நடந்துச்சா? இது மாறவே மாறாது.. கோபத்தில் கொந்தளித்த நடிகை ஷர்மிளா..!!

Spread the love

கேரள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தொடர்பான அறிக்கையை ஹேமா கமிட்டி சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிக்கை வெளியானதில் இருந்து அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. சமீபத்தில் நடிகையும், டாக்டருமான ஷர்மிளா இது பற்றி கூறியதாவது, கமிட்டியின் நோக்கம் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி சொல்லி குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்பது கிடையாது. பாதிக்கப்பட்ட பெண்களிடம் கேட்டால் பெரும்பாலானோர் தண்டனை வாங்கி கொடுப்பது நோக்கம் இல்லை என்பது என்று தான் சொல்வார்கள். அவர்கள் தான் வேலை செய்யும் இடம் தனக்கு சௌகரியமாக இருக்க வேண்டும். என்னுடைய திறமைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.

எனக்கு பாலியல் சுரண்டல் இருக்கக் கூடாது என்பதுதான் அவர்களின் நோக்கமாக இருக்கும். ஹேமா கமிட்டி நோக்கமும் அதுதான். எனக்கு தெரிஞ்சு கமிட்டி போட்டாலும் இங்க எதுவும் மாறப் போறது இல்ல. நான் எல்லாத்தையும் ஓப்பனா சொல்றேன். யூடியூப்க்கும் மீடியாவுக்கும் ஒரு தீனி வேணும். அதனால இத பத்தி நீங்க இப்போ பரபரப்பா பேசிட்டு இருக்கீங்க. இதனால உங்களுக்கு டிஆர்பி அதிகரிக்க வேண்டும். வருமானம் வரணும். அதனால இதை பத்தி பேசுறீங்க. பெரும்பாலான மீடியாக்கள் எந்த நடிகைக்கு யார் பாலியல் தொந்தரவு கொடுத்தது அப்படிங்கறத பத்தி தான் பேசுறீங்களே தவிர இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று யாரும் பேசல. அப்படிப்பட்ட ஆரோக்கியமான டிஸ்கஷன் பொதுவெளியில நடக்கவே இல்லை.

அப்படி நடக்காத வரைக்கும் இது எதுவுமே மாறாது. பத்து நாள் இத பத்தி பேசுவீங்க. அதுக்கப்புறம் இதே நிலைதான் மறுபடியும் வரும். இப்ப பாலியல் சுரண்டல்ல ஈடுபடுற சிலர் தான் மறுபடியும் வந்து பதவியில உக்காருவாங்க. இது தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கும். சின்மயி வந்து வெளியே சொன்னாங்க. என்ன நடந்துச்சு? எதுவுமே நடக்கல. இன்னமும் ஒரு சாதிய ஆணாதிக்க சமூகத்தில் தான் நம்ம வாழ்ந்துகிட்டு இருக்கோம். நாம வெளியே வந்து சொன்னா நம்மள தான் கேள்வி கேட்பாங்க. பிரச்சனை பத்தி சொன்னா அப்ப ஏன் சினிமால வேலை பாக்குறீங்க?

இதை விட்டுட்டு வேற ஏதாவது கௌரவமான தொழில் பண்ணலாம்னு கேள்வி கேக்குறாங்க. எல்லா தொழிலையும் இந்த பிரச்சனை இருக்கு. ஒரு குளத்து வேலை பார்க்கிற பெண்ணுக்கும் இந்த பிரச்சனை இருக்கு. கார்ப்பரேட்டில் வேலை பார்க்கிற பெண்ணுக்கும் இந்த பிரச்சனை இருக்கு. ஹாஸ்பிடல் வேலை பார்க்கிற பெண்ணுக்கும் இந்த பிரச்சனை இருக்கு. கொல்கத்தா டாக்டர் வழக்குல டாக்டர்ஸ் நைட் டியூட்டி வேலை பார்க்க கூடாதுன்னு சொல்றாங்க. அப்போ நர்ஸ் அங்க தான வேலை பாக்குறாங்க? அவங்களும் பெண்கள்தானே? அவர்களை என்ன சொல்லுவீங்க? பெண் நோயாளிக்கு கூட அந்த தொந்தரவு இருக்கு. அப்போ ஹாஸ்பிடலுக்கே வராமல் அட்மிட் ஆகாதீங்கன்னு சொல்லிடுவீங்களா என தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

#image_title

admin

Recent Posts

அம்மாடியோவ்… கைவிலங்கு அணிந்து 101 கி.மீ மலைப்பாதையை… கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தம்பதி… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!!

ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்னது இது?… ரயிலில் பயணியின் உணவில்… கிடந்த உலோகத் துண்டு… ஊழியர் கொடுத்த விளக்கம்… IRCTC-யின் அதிரடி ஆக்‌ஷன்…!

குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…

1 மணத்தியாலம் ago

திக் திக் நிமிடங்கள்… எதுவுமே வேலை செய்யல?… ரயில் விபத்திற்கு நொடிக்கு முன் இன்ஜின் அறையில்… ஓட்டுநர் கதறிய பகீர் வீடியோ… இணையத்தில் வைரல்…!

அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.…

1 மணத்தியாலம் ago

அதிர்ச்சி… 150 கோடியை நெருங்கும் இந்திய மக்கள் தொகை… வைரலாகும் டெல்லி AIIMS டிஜிட்டல் பலகை…!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

1 மணத்தியாலம் ago

காரை நிறுத்தச் சொன்ன காவலரை 200 மீட்டர் தூரம் பறக்கவிட்ட ஓட்டுநர்….. மிரள வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…

2 மணத்தியாலங்கள் ago

“ஐயோ சாவு இப்படியா வரணும்?”…. கண் இமைக்கும் நேரத்தில் முடிந்த நாட்டிய கனவு… நெஞ்சை பதைபதைக்க வைக்கும் ஷாக்கிங் வீடியோ….!

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…

2 மணத்தியாலங்கள் ago