பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஷாருக்கானின் மேனேஜர் பூஜா தத்லானி சொத்து மதிப்பு தொடர்பான தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.
பாலிவுட்ல சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான். இவரை அனைவரும் பாலிவுட் பாட்ஷா என்று அழைப்பார்கள். இந்தியா மட்டும் இல்லாமல் உலக அளவில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் சிறந்த நடிகராக அசதி வரும் இவர் 6,300 கோடி சொத்துக்கு அதிபராக இருக்கின்றார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர் கடந்த ஆண்டு பதான், ஜவான், டங்கி என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து அசத்தியிருக்கின்றார். சினிமாவில் மட்டுமில்லாமல் பிசினஸிலும் கலக்கி வரும் ஷாருக்கான் சொந்தமாக ரெட் சில்லீஸ் என்கின்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவரும் இவர்தான்.
நடந்து முடிந்த டி20 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான் கோப்பையை வென்று அசத்தியது. இப்படி சினிமா மற்றும் பிசினஸில் மிக சக்சஸ்ஃபுல்லாக இருந்து வருபவர் ஷாருக்கான். இவரின் மேனேஜர் பூஜா ஷாருக்கானின் பிசினஸ், தயாரிப்பு நிறுவனம், ஐபிஎல் டீம் நிர்வாகம் என அனைத்தையும் கவனித்து வருகின்றார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஷாருக்கான் இடம் மேனேஜராக பணியாற்றி வரும் பூஜா பல கோடி சொத்துக்கு அதிபராக இருக்கின்றார். பூஜாவுக்கு ஒரு மாதத்திற்கு மட்டும் 60 லட்சம் சம்பளமாம், ஒரு ஆண்டுக்கு ஏழு முதல் ஒன்பது கோடி வரை இவர் சம்பாதிக்கின்றார். 2021 நிலவரப்படி பூஜாவின் சொத்து மதிப்பு 45 முதல் 50 கோடி இருக்கும் என கூறப்படுகின்றது.

மேலும் பல்வேறு சொகுசு கார்களை வைத்திருக்கும் இவர் கடந்த ஆண்டு மும்பையில் விலை உயர்ந்த அப்பார்ட்மெண்ட் ஒன்றில் குடியேறி இருக்கிறார். அங்கு ஒரு பிளாட்டின் விலை மற்றும் 7.88 கோடியாகும் . அதுமட்டுமில்லாமல் பூஜா சித்தேஷ் குரானி என்கின்ற இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகளும் இருக்கின்றார் .இந்நிலையை ஷாருக்கான் அவர்களின் மேனேஜர் சொத்து மதிப்பு தான் தற்போது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
