கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் பருத்திவீரன். இத்திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக கார்த்தி திரையுலகில் அறிமுகமானார். மதுரை மையமாக வைத்து உருவான இத்திரைப்படத்தில் நடித்திருந்த பெரும்பாலானோர் புது முகங்கள் தான் அவர்களுக்கு அடையாளமாக இத்திரைப்படம் மாறியது.

இதில் பிரியாமணி, சரவணன், சுஜாதா, கஞ்சா கருப்பு என பல பிரபலங்கள் நடித்திருந்தனர். அந்த வகையில் பருத்திவீரன் திரைப்படத்தில் பொணந்தின்னி கதாபாத்திரத்தில் நடித்த செவ்வாழை ராசுக்கும் இத்திரைப்படம் நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது .

இவர் பாரதிராஜா இயக்கிய கிழக்குச் சீமையிலே, பிரபு சாலமன், மைனா மற்றும் விக்ரம் நடித்த கந்தசாமி என பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்பொழுது 70 வயதான செவ்வாழை ராஜு உடல்நிலை குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருந்தார்.

நடிகர் செவ்வாழை ராசுவுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். தமிழ் திரையுலக சேர்ந்த காமெடி நடிகர்களான டிபி கஜேந்திரன், மயில்சாமி, மனோபாலா ஆகியோர் அடுத்தடுத்து மரணமடைந்த நிலையில் தற்போது செவ்வாழை ராஜுவின் மரணமும் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது இவரது மறைவுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
