‘அச்சச்சோ, அவர் பயங்கரமான ஆளாச்சே’ டைலாக் மூலம் பிரபலமான நடிகர் சேஷு திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

By Priya Ram

Published on:

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சேஷு. இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். காமெடி நடிகர்களான சந்தானம் யோகி பாபு, ஆகியோருடன் இணைந்தும் நடித்துள்ளார்.

   

கடைசியாக சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் சேஷு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். இவரது காமெடி காட்சிகளை வைத்து மீம்சும் பகிரப்பட்டது. ஐயய்யயோ, அவரா…அவரு பெரிய ஆளாச்சேன்னு எல்லாரும் பயப்படுவாங்க..” என்று சேஷு கூறிய வசனம் என்றும் பலரால் ரசிகப்படுகிறது.

இந்த நிலையில் 60 வயதாகும் சேஷு வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரை சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இன்று சேஷு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் என ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Priya Ram