பிரபல வில்லன் நடிகர் செந்தாமரையின் மனைவி இந்த சீரியல் நடிகையா?.. அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!

By Nanthini on ஆனி 6, 2025

Spread the love

எம்ஜிஆர் மற்றும் சிவாஜி காலங்களில் தொடங்கி ரஜினி கமல் காலங்கள் வரை வில்லனாக பல நடிகர்களை மிரட்டிக் கொண்டிருந்த செந்தாமரையை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. செந்தாமரையின் மாஸ் வசனம் மற்றும் அவருடைய முக பாவனை அப்படியே பார்த்ததும் இரண்டு போகும் வகையில் தான் இருக்கும். அவர் நடித்த பல திரைப்படங்கள் இன்று வரை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. நடிகர் செந்தாமரை 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் செந்தாமரை பாதுகாத்த டாப் சீக்ரெட்! | Senthamarai birthday special  article - hindutamil.in

   

வில்லன் நடிகராகவும் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்த செந்தாமரை முதலில் மேடை நடிகராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவர் நடித்ததில் மலையூர் மம்பட்டியான், மூன்று முகம், தம்பிக்கு எந்த ஊரு, தூறல் நின்னு போச்சு, குரு சிஷ்யன் போன்ற திரைப்படங்கள் இவருடைய வேறு முகத்தை வெளிக்கொண்டு வந்து காட்டியது.

   

என்னை காப்பாத்திட்டு என் புருஷன் போயிட்டாரு.. அவர் இல்லாத வாழ்க்கை! செந்தாமரை  மனைவி எமோஷனல் | Actor Senthamarai's wife Kausalya spoke emotionally about  her husband love ...

 

ரஜினியின் நெருங்கிய நண்பனாக இருந்த இவர் ரஜினியுடன் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார். நடிகர் செந்தாமரை தன்னுடைய 57ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக கல்யாண மாலை என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது உயிரிழந்தார். இவருடைய மனைவி தான் பழம்பெரும் நடிகை கௌசல்யா. இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் பல சீரியல்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

மூன்று முகம் வில்லன் நடிகர் செந்தாமரையை ஞாபகம் இருக்கா?.. யாருக்கும்  தெரியாத அவரது காதல் கதை இதோ!..

பூவே பூச்சூடவா உள்ளிட்ட சீரியல்களில் நடித்த கௌசல்யா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஆஹா கல்யாணம் சீரியலிலும் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது அவருடைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செந்தாமரையின் மனைவி இவங்கதானா என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.