Connect with us

csk க்கு விசில் போடு… csk வெற்றி தருணத்தை மகிழ்ச்சியுடன் வெளியிட்ட நடிகர் சதீஷ்… வைரலாகும் வீடியோ…

CINEMA

csk க்கு விசில் போடு… csk வெற்றி தருணத்தை மகிழ்ச்சியுடன் வெளியிட்ட நடிகர் சதீஷ்… வைரலாகும் வீடியோ…

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சதீஷ். இவர் தற்பொழுது பல திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இவரது காமெடி கட்சிக்கென்று ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உள்ளனர். இவர் நேற்று அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியை காண சென்றுள்ளார் .

லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் அகமதாபாத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இறுதிப்போட்டி நடைபெற இருந்தது. இந்த போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருந்ததும் குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் இதே மைதானத்தில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்க சென்னையும்,

   

 

ப்ளே ஆப்பில் தோல்விக்கு பழி தீர்க்க குஜராத்தும் கங்கணம் கட்டி தயாராக இருந்தன. சொந்த மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுவது குஜராத் அணிக்கு கூடுதல் சிறப்பாக அமைந்தாலும் தோனியின் மஞ்சள் படை இதை எதிர்க்க காத்திருந்தது. திட்டமிட்டபடி இவர்களது ஆட்டம் நடைபெறவில்லை. மழையின் காரணத்தால் போட்டி ஒத்திவைக்கப்பட்டு ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதைத் தொடர்ந்து நேற்று நடந்த சிஎஸ்கே போட்டியை காண மைதானத்திற்கு சென்றுள்ளார் நடிகர் சதீஷ். அங்கு சிஎஸ்கே வின் வெற்றி தருணத்தை மகிழ்ச்சி பொங்க இணையத்தில்  வீடியோவாக பதிவு செய்துள்ளார் . இந்த வீடியோ தற்பொழுது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Sathish (@actorsathish)

Continue Reading
To Top