சூப்பர் ஸ்டார் பட்டம் ஹாட் டாபிக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் சத்யராஜ்….

By Samrin

Published on:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சத்யராஜ் . இவர் கோயமுத்தூரை பூர்வீகமாக கொண்டவர். இவர் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் எதற்கும் துணிந்தவன்,  வீட்டில் விசேஷம் போன்ற படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இவர் நடிகர் மட்டுமல்ல ஒரு தயாரிப்பாளராகவும் ஒரு சில படங்களை வெளியிட்டுள்ளார். நடிகர்  சத்யராஜ்  மகேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

   

இவர்களுக்கு திவ்யா என்ற மகளும்  சிபிராஜ் என்ற மகனும் உள்ளார்.  இவரது மகன் சிபிராஜ் ஒரு திரைப்பட நடிகரும் கூட.சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் பட்டம் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சத்யராஜ் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், சூப்பர் ஸ்டார் என்றாலே கடந்த 45 வருடமாக ரஜினி சார் தான் ஞாபகத்திற்கு வருகிறார். என்னைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சார் மட்டும் தான் .ஏழிசை மன்னர், மக்கள் திலகம், நடிகர் திலகம் என காலத்திற்கேற்ப பட்டங்கள் மாறினாலும் ஒவ்வொன்றுக்கும் ஒருவர் தான் சொந்தமானவர்.

ரஜினி சாரை மக்கள் திலகம் என்றால் ஏற்றுக் கொள்வார்களா ? தசாவதாரம் படத்தில் கமல் சார் சூப்பராக நடித்ததால் அவரை நடிகர் திலகம் என்று கூற முடியுமா ? சூப்பர் ஸ்டார் என்றால் அது  ரஜினிகாந்த் மட்டும் தான் , உலக நாயகன் என்றால் அது கமலஹாசன் மட்டும் தான், தளபதி என்றால் அது விஜய் மட்டும் தான், தல என்றால் அது  அஜித் மட்டும் தான் என சமீப காலமாகவே ஓடிகொண்டிருந் சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து தனது பேச்சை நிறைவு செய்தார் நடிகர்  சத்யராஜ்.