இயக்குனர் விஜய் மில்டன் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் சென்னை வடபழனியில் மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிலையில் மேடையில் பேசிய சத்யராஜ் கூறியதாவது, எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதால் எனக்காக எல்லாரும் வேண்டிக் கொள்கிறோம் என்று சொல்வார்கள். கடவுளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் நான் அவரை தொந்தரவு செய்வதே இல்லை. இரண்டு பேர் போய் கடவுளிடம் முறையிட்டால் அவர் யாருக்கு நல்லது செய்வார். ஆனால் நான் அவரிடம் எந்த முறையிடும் வைப்பதில்லை.
அதனால் அவருக்கு என்னை ரொம்ப பிடிக்கும். சினிமாவில் இவ்வளவு நாட்கள் நான் இருக்க காரணம் எந்த இலக்கும் கிடையாது. அதனாலேயே நான் இவ்வளவு காலம் நடிக்கிறேன் எனக் கூறினார். இதனையடுத்து மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறீர்களா என கேள்வி எழுப்பியதற்கு கூலி திரைப்படத்தில் நான் ரஜினிகாந்துடன் நடிக்கிறேன். மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க யாரும் என்னை அணுகவில்லை.
மணிவண்ணன் போன்ற இயக்குனர்கள் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை எடுத்தால் நன்றாக இருக்கும். மேலும் உள்ளதே உள்ளபடி இயக்கும் இயக்குனர் படத்தை எடுத்தால் நான் நடிக்க தயாராக உள்ளேன். அது மட்டுமில்லாமல் வெற்றி மாறன், பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ் போன்ற இயக்குனர்கள் எடுத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என பதில் அளித்துள்ளார். இது பற்றி தான் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.