விஜயகாந்த் மறைவு.. கேப்டன் முகத்தை பார்த்து தேம்பி தேம்பி அழுத நடிகர் சத்யராஜ்… கண்கலங்க வைத்த வீடியோ…

By Begam on மார்கழி 29, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். தனது ரசிகர்களால் ‘கேப்டன்’ என்று கொண்டாடப்பட்டவர் .அரசியலிலும் சரி , சினிமாவிலும் சரி கால் பதித்து கலக்கிய இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஒரு சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தார்.

#image_title

அவர் சமீபத்தில் சென்னை மியாட் மருத்துவமனையில் உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக கூறி செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின் பூரண குணமடைந்து விடு திரும்பினார். பிறகு நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

   
   

#image_title

 

சினிமாவில் நடிகர் சங்க தலைவராக இருந்து இவர் செய்த சாதனைகள் ஏராளம் .அதேபோல அரசியலிலும் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக இருந்து அரசியல் தலைவராகவும் சிறந்து விளங்கினார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி வைரலானது .இதைத் தொடர்ந்து நேற்று  அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.

#image_title

இந்நிலையில் நேற்று திடீரென நடிகர் விஜயகாந்த் மரணம் அடைந்து விட்டார் என்ற மருத்துவமனை அறிக்கை வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தற்பொழுது ஒட்டுமொத்த திரையுலகமும், ரசிகர்களும், அவரது தொண்டர்களும் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Rajinikanth

இந்நிலையில் நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின், மன்சூர் அலி கான்,  நடிகர் விஜய் இவர்களை போல நடிகர் சத்யராஜும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மறைந்த நடிகர் விஜயகாந்தின் முகத்தை பார்த்து அவர் தேம்பி தேம்பி அழும் வீடியோ நம் மனதை ரணப்படுத்துகிறது. இதோ அந்த வீடியோ…