Connect with us

பட வாய்ப்பு இல்லாமல் புது பிசினஸ் தொடங்கிய நடிகர் சதீஷ்… கை கொடுக்குமா இந்த பிசினஸ்…?

CINEMA

பட வாய்ப்பு இல்லாமல் புது பிசினஸ் தொடங்கிய நடிகர் சதீஷ்… கை கொடுக்குமா இந்த பிசினஸ்…?

 

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவுக்கு காமெடி நடிகர்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில் காமெடியில் கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் சதீஷ். விஜய், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி செய்தவர் நடிகர் சதீஷ் .நடிகர் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ, மிஸ்டர் லோக்கல், வேலைக்காரன், மான்காரத்தே உள்ளிட்ட பல படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார் சதீஷ்.

sathish1_cine

   
இதன் மூலம் சிவகார்த்திகேயன் சதிஷ் இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்புறவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. பல்வேறு நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து கொண்டிருந்த இவர், ஜித்தன் ரமேஷ் நடித்த ‘ஜெர்ரி’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். இதுவரை காமெடியில் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வந்துள்ளார் சதீஷ்.  தற்போது இவர் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் சதீஷ். இவர் தற்பொழுது shuttle cock விளையாட்டிற்காக மைதானம் ஒன்றை திறந்துள்ளார். அந்த shuttle court ற்கு csk என்று பெயரிட்டுள்ளார். இதுகுறித்து வீடியோவுடன் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார் நடிகர் சதீஷ். இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Sathish (@actorsathish)

Continue Reading
To Top