தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் சசிகுமார். இவர் ஒரு திரைப்பட நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கின்றார். இவருடைய இயக்கத்தில் கலந்து 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சுப்பிரமணியபுரம். அந்தத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. முதல் படத்திலேயே இயக்குனராகவும் நடிகராகவும் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இவ்வாறு சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளிவந்த ஈசன் என்ற படத்தை எடுத்தார். அதன் பிறகு இவர் நடிகராக மட்டும் தான் நடித்து வருகின்றார். இவருடைய நடிப்பில் வெளியான பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளன.
அதன்படி தற்போது சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் நந்தன். இந்தத் திரைப்படத்தை சரவணன் இயக்கியுள்ள நிலையில் படத்தில் சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி மற்றும் பாலாஜி சக்திவேல் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் சசிகுமார் சமீபத்தில் பிரபல youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் , தன்னுடைய முதல் படத்தை தானே இயக்கியது குறித்த காரணத்தை சசிகுமார் பகிர்ந்து கொண்டார்.
அப்போது, நிறைய தயாரிப்பாளர்கள் படத்தை புரொடியூஸ் பண்ண ரொம்பவும் தயங்கறாங்க. அவங்களுக்கு புரிய வைக்கிறதே ரொம்ப கஷ்டம். எனக்கு நல்லாவே தெரியும் என்னுடைய முதல் படத்தின் கதையை கட்டாயம் புரிய வைக்க முடியாது என்று. அதனால்தான் என் முதல் படத்தை(சுப்பிரமணியபுரம்) நானே ப்ரொடியூஸ் பண்ணேன். நானே ஒரு ப்ரொடியூஸ் கம்பெனி ஆரம்பித்து நானே முதல் படத்தை புரொடியூஸ் பண்ண. அப்போ அமீர் கூட என்கிட்ட சொன்னாரு, நாம போய் ஒரு புரொடியூசர் கிட்ட பேசலாம்னு. ஆனா என் கதையை அவங்க கிட்ட புரிய வைக்கிறது ரொம்ப கஷ்டம் நானே பண்றேன்னு சொல்லிட்டு பண்ண என்று சசிகுமார் கூறியுள்ளார்.