ZeeTamil தொலைக்காட்சியில் நடைபெற்ற DanceJodiDanceReloaded 3 நடன போட்டியாளராக கலந்து கொண்டவர் திருமதி.பஞ்சமி நாயகி. இவரை முன்னதாக குடும்பத்தாருடன் சென்னையில் சரத்குமார் இல்லத்திற்கு அழைத்து விருந்தோம்பல் செய்தார் சரத்குமார். இதனையடுத்து பஞ்சமி கள்ளக்குறிச்சியில் தனது இல்லத்திற்கு வருகை தரும்படி சரத்குமாரிடம் கேட்டுக்கொண்டாராம்.
அதன்படி, கள்ளக்குறிச்சியில் இன்று நடைபெறவிருக்கும் நலத்திட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த சரத்குமார் காலை குதிரைச்சந்தல், முத்தையா நகரில் அமைந்திருக்கும் திருமதி.பஞ்சமிநாயகி – திரு.மணிகண்டன் அவர்களின் இல்லத்திற்கு சென்று காலை சிற்றுண்டி அருந்தி, அந்த பகுதி வாழ் மக்களை சந்தித்து அன்பை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
