மலையாள இயக்குனர் மாதவ் ரமாதாசன் டைரக்சன் செய்துள்ள படம் ஆழி. இந்த படத்தில் சரத்குமார் தேவிகா சதீஷ் இந்திரஜித் ஜெகன் வையாபுரி தாமரைச்செல்வி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்துள்ளார். வருகிற 27ம் தேதி ஆழி படம் ரிலீஸ் ஆக உள்ளது. முன்னதாக ஆழி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
இந்த விழாவில் பேசிய நடிகர் சரத்குமார் பேசியதாவது, இந்த படத்தின் கிளிம்ப்ஸை பார்க்கும்போது நான் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பது தெரியும். நெகட்டிவ் கேரக்டருக்கு தான் இன்று வரவேற்பு இருக்கிறது. இன்று கதாநாயகன் என்று சொன்னால் நல்லவனாக இருந்தால் மட்டும் கதாநாயகன் ஆக முடியாது. இப்போதெல்லாம் தப்பு செய்பவர்தான் கதாநாயகன். புஷ்பா படத்தில் ஹீரோ செம்மரம் கடத்துகிறார். ஆனால் அவர் தானே ஹீரோ? அதனால் காலங்கள் மாறிவிட்டன. இன்றைக்கு வித்தியாசம் தேவைப்படுகிறது என்று நடிகர் சரத்குமார் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
