தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் தயாராகிக் கொண்டு வருகின்றனர். மதுரையில் 2வது மாநாட்டில் தவெக கட்சி தலைவர் நடிகர் விஜய் பாஜக, பிரதமர் மோடி மற்றும் மு.க.ஸ்டாலினை பற்றி விமர்சித்திருந்தார். மதுரையில் நடந்த 2-வது மாநாட்டைப் பற்றி நடிகர் சரத்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் தமது பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜயை பற்றி பேசி உள்ளார் சரத்குமார்.
ஊழலற்ற அரசாங்கம் மற்றும் வெளிப்படை தன்மை உடைய ஆட்சியை நடத்துபவர் பிரதமர் மோடி. அவரை கத்துக்குட்டியான நடிகர் விஜய் மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று அழைத்துள்ளார். அப்படி கூறியது ஒன்றும் தவறில்லை இருப்பினும் கோடநாட்டிலே தெருவிலே நின்றுக்கொண்டு இருக்கும் போது மிஸ் ஜெயலலிதா ஜெயராம் என்று சொல்வீர்களா? அப்படி தான் சொல்லிப் பாருங்களேன். சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் போகுமா? சாப்பிட்டு வீட்ல தூங்குமா? சிங்கம் என்றால் சிங்கம் மாதிரி இருக்கணும் தூங்குற சிங்கமா இருக்க கூடாது.
விஜய் பேசியது அதிகம், அதனால் தான் அவர் பேசுனதை பத்தி நான் பேசுறேன். முதல்வரை அங்கிள் என்று சொல்லுவேன் என்று சொல்கிறார். நீங்க அங்கிள்னு, தாத்தானு எப்படி வேண்டுமானாலும் கூப்பிடுங்க கவலைப்படல. ஆனா முதல்வர் பெயரை சொல்லி கூப்பிட்டது தப்பு. நீங்க அந்த மனுசனுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றாலும் பரவால்ல அவரோட பதவிக்கு மரியாதை கொடுங்க. அதே மாதிரி பிரதமர் பெயர் சொல்லி கூப்பிடுறது தப்பு. மரியாதையை கத்துக்கோங்க, தைரியம் இருந்தா என்கிட்ட வந்து பேசிப் பாருங்க என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…
பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…
மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, பெர்ஷியன் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடந்த 54…