இந்த மனசு தான் சார் கடவுள்…. வீட்டின் வாசலிலேயே பொது மக்களுக்கு இலவசமாக…. நடிகர் சரத்குமாரின் செயலுக்கு குவியும் வாழ்த்துக்கள்…

By Archana on சித்திரை 12, 2023

Spread the love

தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகராக சிறந்து விளங்கியவர் சரத்குமார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் பாடி பில்டர் ஆகவும் இருப்பவர்.

sarathkumar-offers-his-collections-of-books-freely-to-all-photos-pictures-stills

   

இவர் முதன் முதலில் கண் சிமிட்டும் நேரம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சூரியன், வைதேகி கல்யாணம் மற்றும் சேரன் பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார்.

   

sarath4-1024x576-1

 

அந்தத் திரைப்படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தன. இதுவரை 130 க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

6306dca1-a30b-40dd-b470-8910d278d95e

சினிமா ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அரசியலிலும் திகழ்ந்தவர். இந்நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியான நிலையில் அதில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதிலும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

8ac6241d-5402-464d-815d-1277873d8501

இந்நிலையில் சரத்குமார் தனது இல்லத்தில் உள்ள நூலகத்தில் இருந்து புத்தகங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் முன்முயற்சியை தொடங்கியுள்ளார். அவரின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

sarathkumar-updatenews360

தன்னிடம் உள்ள சுமார் 6000 புத்தகங்களை மக்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ள சரத்குமார் தனக்கு பிடித்த புத்தகங்களை மக்களை தேர்வு செய்து எடுத்துக் கொள்ளட்டும் என வீட்டின் வாசலில் புத்தகங்களை வைத்துள்ளார்.

Whats-App-Image-2023-04-10-at-5-02-14-PM

இது குறித்து பேசிய சரத்குமார், நான் படித்த ,எனக்கு அன்பளிப்பாக வந்த மற்றும் என் தந்தையார் எனக்காக விட்டு சென்ற சுமார் 6000 புத்தகங்களை தினமும் எடுத்து படிப்பது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. அதனால் இந்த புத்தகங்களை பொக்கிஷமாக வைத்திருப்பதை விட பிறருடன் பகிர்ந்து கொள்வதை மகிழ்ச்சியாக எண்ணுகிறேன்.

bdaa4700-224e-447b-8452-0f4d23124f6c

என்னிடம் உள்ள இந்த புத்தகங்களை நூலகத்தில் கொடுத்து விடலாம் என்று சொன்னார்கள், சிலர் விற்று விடலாம் என்று கூறினார். இந்த புத்தகங்களில் இருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்களை பிறகும் படித்து பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் இலவசமாகவே வீட்டின் வெளியில் புத்தகங்களை வைத்திருக்கிறேன் என சரத்குமார் கூறியுள்ளார். இவரின் இந்த செயலை ரசிகர்கள் மனதார பாராட்டி வருகின்றனர்.